பெரியபாளையம் அருகே அரசு பள்ளியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

பெரியபாளையம் அருகே அரசு பள்ளியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
X

பெரிய பாளையம் அருகே அரசு பள்ளயில் நடந்த சுதந்திர தினவிழாவில் குழந்தைகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

பெரியபாளையம் அருகே அரசு பள்ளியில் 78வது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பெரியபாளையம் அருகே சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு தொடக்கப் பள்ளியில் கொடியேற்றி இனிப்பு வழங்கி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

78-வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அரியப்பாக்கம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷோபனம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் எஸ்சி/எஸ்டி.பிரிவின் மாநில பொதுச் செயலாளர் ஷீபா கோபால். கலந்துகொண்டு அவரது ஏற்பாட்டில் பள்ளியில் பயிலும் 60 மேற்பட்ட மாணவி, மாணவர்களுக்கு நோட்டு, பேனா,பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி/எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவர் எம்.ரங்கநாதன்,மாவட்ட பொதுச் செயலாளர் தேவராஜ்,ராமு, மாவட்டச் செயலாளர். தாஸ்,கும்மிடிப்பூண்டி தொகுதி துணை தலைவர் விமல் குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி மலர், ஆரணி நகர மாணவரணி செயலாளர் சந்துரு, அமரேஷ். மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business