கும்மிடிப்பூண்டி அருகே பேருந்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே பேருந்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல்
X

கஞ்சா கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட ஆந்திர மாநில இளைஞர் ஜான்.

கும்மிடிப்பூண்டி அருகே பேருந்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திர நபர் கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை கே. எஸ். சாலையில் தனியார் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை கே. எஸ். சாலை வழியாக ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கவரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போலீசார் ஆந்திர மாநிலம் சத்தியவேடு, கவரப்பேட்டை வழியாக கே எஸ் நெடுஞ்சாலை மார்க்கமாக தமிழகம் வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தை சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பேருந்தின் இருக்கையின் கீழே ஒரு பை வைக்கப்பட்டு இருப்பதை கண்ட போலீசார் அந்த பையை சோதனை மேற்கொண்ட போது பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அங்கு அமர்ந்திருந்த ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அடுத்த செகந்திராபாதையைச் சேர்ந்த ஜான் ( வயது 42).என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக அவர் பதில் அளித்ததன் அடிப்படையில் அவரிடம் கவரப்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் கஞ்சா கடத்தியது உறுதியானது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனனர்.

இந்த கஞ்சாவை ஜான் யாருக்காக கடத்தி வந்தார் என தெரியவில்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்து இதுபோல் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நெட்வொர்க்கில் உள்ள முக்கிய புள்ளி கைது செய்யப்பட்டால் தான் கஞ்சா கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதால் போலீசார் முக்கிய புள்ளியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்..

Tags

Next Story
நைட் 7 மணிக்கு மேல டீ குடிக்க கூடாதாமா?..அப்படி குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வரும்!..டீ பிரியர்களே உஷார்..!