ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள் பறிமுதல்

ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள் பறிமுதல்
X

ஊத்துக்கோட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

ஊத்துக்கோட்டை வாகன சோதனையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவடடம், தமிழக-ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை பகுதியில் போக்குவரத்து சோதனை சாவடி உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா , கர்நாடகா போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கும் அங்கிருந்து தமிழகத்திற்கு வருவதற்கும் ஊத்துக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில் இன்று காலை முதல் அனுமதி பெறாமல் செல்லும் வாகனங்களை ஊத்துக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரன் மற்றும் அதிகாரிகள் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் சோதனை செய்தனர் . அப்போது சோதனை சாவடியில் திடீர் சோதனை மேற்கொண்டபோது தனிநபருக்கு சொந்தமான வாகனங்களை வாடகைக்கு எடுத்துச்சென்றது தெரிந்தது மேலும் அனுமதிசீட்டு பெறாமல் கள்ளத்தனமாக வாடகை ,வாகனமாக பயன்படுத்தப்பட்ட 5 தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்காக திருவள்ளூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பகுதியில் இருந்து தான் ஆந்திராவில் இருந்த போதை பொருட்கள் அடிக்கடி கடத்தி வருவதாக எச்சரிக்கை இருப்பதால் சோதனகைளை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
highest paying ai jobs