போலீஸ்காரரை தாக்கி தப்பி ஓடிய 7 பேரில் 5 பேர் கைது

போலீஸ்காரரை தாக்கி தப்பி ஓடிய 7 பேரில் 5 பேர் கைது
X

கும்மிடிப்பூண்டி அருகே போலீசாரை தாக்கி தப்பி ஓடிய வடமாநிலத்தவர்கள்.ஏழு பேரில் 4 பேர் சிறைபிடிப்பு. உடந்தையாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது.

கும்மிடிப்பூண்டி அருகே போலீஸ்காரரை தாக்கி தப்பி சென்ற 7 பேரில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை கிராமத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் முர்த்தி இவர் அதே பகுதியில் கறிக்கோழி பண்ணை வைத்து பராமரித்து வருகிறார். இந்த கோழி பண்ணையில் 4 ஆண்டுகளாக வடமாநிலத்தவர்கள் சிலர் வாடகைக்கு தங்கி இருப்பதாகவும், அவர்கள் இரவு நேரங்களில் மட்டும் கார்களில் வெளியில் செல்வதாகவும் பாதிரிவேடு போலீசாருக்கு கடந்த 5.நாட்களுக்கு முன்பு புகார் சென்றது. இதன் பெயரில் கண்ணன்கோட்டை மைதானம் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் வினோத் மட்டும் போலீசார் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் வந்துள்ளனர்.

அப்போது 7 பேர் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் மிஷின் ஒன்றை உடைத்துக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருளை அங்கே விட்டு, விட்டு அருகே இருந்த லோடு ஏற்றும் பொலிரோ வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயற்சித்துள்ளனர்.

மர்ம நபர்களை தடுக்க முற்பட்டபோது கத்தியால் போலீசார் பின்பக்கம் தாக்கியும், போலீசாரை தள்ளிவிட்டு வாகனத்தை வேகமாக பூவலம்பேடு - கவரப்பேட்டை சாலை நோக்கி வேகமாக சென்றனர்.

இது தொடர்பாக போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள மைக் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் ஆகிய போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

திடீரென ஜி. ஆர். கண்டிகை பகுதியில் மர்ம நபர்கள் லோடு வாகனத்துடன் மறந்துவிட்டனர். இதைக் கண்ட போலீசார் கும்மிடிப்பூண்டி அனைத்து காவல் நிலையங்கள் பணியாற்றும் போலீசார் மட்டும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இரவு முழுவதும் ஆங்காங்கே சாலைகளையும் கிராமப்புறங்களில் தேடி வந்தனர். சுமார் 3 மணி அளவில் அந்த பொலிரோவை வாகன எடுத்துக்கொண்டு சின்ன புலியூர்- தேர்வாய் கண்டிகை வழியாக மீண்டும் தப்பினர்.

இதை பார்த்த போலீஸ் குழுவினர் நீண்ட தூரம் துரத்தியபடி சென்றபோது பாலவாக்கம் அருகே ஊத்துக்கோட்டை போலீசார் லாரியை குறுக்கே நிறுத்தி அந்த மர்ம நபர்களை மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து இரண்டு பேர் மட்டும் தப்பி ஓடினர் மீதமுள்ள ஐந்து பேரை ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து 4 நாட்களாக விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவரிடம் இருந்து ஒரு கத்தி ,இரும்பு ராடு திருப்புலி, வெல்டிங் மிஷின், விமான டிக்கெட்,2 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணை நடத்தியதில் பொன்னேரி தாலுக்கா கிலிக்கோடி கிராமத்தைச் சேர்ந்த திவாகர்( வயது 25), அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்டாப்( வயது 37),ஆசிப்கான்( வயது 24),அஸ்லாம்கான் ( வயது 24), சலீம்( வயது 32) என்பது தெரிய வந்தது மேலும் விசாரணையில் இவர்கள் கண்ணன்கோட்டை பகுதியில் உள்ள பழைய கோழிப் பண்ணையில் தங்கி இருந்து நெல்லூர், தடா, குமிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள மாடுகளை கடத்தி வரப்பட்டு இரவு நேரங்களில் அதை கேரளாவுக்கு கேரளா பதிவு கொண்ட வாகனத்தில் கேரளாவுக்கு இரவு நேரங்களில் அனுப்புவதாகவும் தொடர்ந்து வாடிக்கையாக செய்து வந்துள்ளனர்.

அது மட்டுமல்ல மீதமுள்ள நேரத்தில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி விற்பதும் சில இடங்களில் ஏடிஎம் மெஷின் மற்றும் கொலை சம்பவங்கள் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.மேலும் அவர்கள் தப்பிச் சென்றபோது வாலிபர்கள் கால் முறிவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மாவுகாட்டு கட்டுப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து 5 பேர் மீது பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!