கும்மிடிப்பூண்டி அருகே சொகுசு காரில் கடத்திய 33 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே சொகுசு காரில் கடத்திய 33 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பார்வையிடும் காவல் கண்காணிப்பாளர்.

கும்மிடிப்பூண்டி அருகே சொகுசு காரில் கடத்தி வந்த 33 கிலோ கஞ்சாவுடன் கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஸ்கார்பியோ சொகுசு கார் ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில் ரகசிய அறை அமைத்து பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து சுமார் 33கிலோ கஞ்சாவை சொகுசு காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த நௌபல், சுல்பிகர் ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கஞ்சா வேட்டையில் தீவிரம் காட்டிய காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!