எளாவூர் சோதனைச் சாவடியில் 30 கிலோ வெள்ளி, ரூ.19 லட்சம் பறிமுதல்

எளாவூர் சோதனைச் சாவடியில் 30 கிலோ வெள்ளி, ரூ.19 லட்சம் பறிமுதல்
X

பைல் படம்.

எளாவூர் சோதனைச் சாவடியில் அனுமதியின்றி எடுத்துவரப்பட்ட 30 கிலோ வெள்ளி, ரூ.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் இன்று அதிகாலையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம் ஓங்கூரில் இருந்து சென்னைக்கு சொகுசு கார் ஒன்றில் உரிய அனுமதியின்றி 30கிலோ வெள்ளி, 19லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஒருவரை கைது செய்து ஆரம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
ai future project