சிங்கப்பூரிலிந்து 244 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் கும்மிடிப்பூண்டி வருகை

கும்மிடிப்பூண்டிக்கு வந்துள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்கும் பணி நடைபெற்றபோது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தேவையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்க தமிழக அரசு சிங்கப்பூரிலிருந்து 244 காலி சிலிண்டர்களை இறக்குமதி செய்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த காலி சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்புவதற்காக லாரிகள் மூலமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை கொண்டுவரப்பட்டுள்ளது.
சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 4 நிறுவனங்கள் தற்போது மருத்துவ ஆக்சிஜன் தயாரித்து விநியோகம் செய்து வருவதால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு கொண்டுவரப்பட்ட இந்த காலி சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்புவதற்கான பணிகளைக் குறித்து சிப்காட் நிர்வாகமும் சுகாதாரத் துறையும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu