பெரியபாளையம் அருகே தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

பெரியபாளையம் அருகே தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
X
தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெரியபாளையம் அருகே தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

எல்லாபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இரண்டு ஆண்டு அரசின் சாதனை விளக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் எல்லாபுரம் ஒன்றியம் 82 பனப்பாக்கம் கிராமத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜே. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முன்னதாக அனைவரையும் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானசேகர் வரவேற்றார்.

பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்திய வேலு, ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சித்திரா முனுசாமி, வர்த்தக அணி தனசேகர், ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் பி.ஜே.மூர்த்தி தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழ் சாதிக், ஆகியோர் பேசுகையில் தி.மு.க. அரசு அமைந்து இரண்டு ஆண்டு காலத்தில் மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளையும் மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றியது தி.மு.க. அரசுதான் என்றும் சொல்லிக் கொண்டு போனால் எத்தனையோ சாதனைகள் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு, செப்டம்பர் மாதம் முதல் தகுதி அடிப்படையில் அனைத்து குடும்ப தாய்மார்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட உள்ளதாகவும், நியாயவிலை கடையில் தரமான பொருட்களையும் வழங்குவதாகவும். என்று அரசின் இரண்டு ஆண்டு காலத்தில் நடைபெற்ற சாதனை குறித்து எடுத்துரைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாநில நிர்வாகிகள் கன்னிகை ஜி.ஸ்டாலின், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், ஒன்றிய பிரிதிநிதி தாமோதரன், சேகர், அவைத் தலைவர் ரவிச்சந்திரன், சண்முகம், சிவாஜி, ஜமுனா அப்பன், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய வர்த்தக அணி பரந்தாமன் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business