நண்பர்களுடன் ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் உயிரிழப்பு

நண்பர்களுடன் ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் உயிரிழப்பு
X

நீரில் மூழ்கி உயிரிழந்த ருத்தீஸ் மற்றும் கோகுல்.

ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்ற 9ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஈன்ரன்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிரஞ்சீவி. இவரது மகன் ருத்தீஸ் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி விடுமுறைக்காக அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்த பொன்னேரி சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி மகன் கோகுல் (13)ஆகியோர் இருவரும் அப்பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் சக நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் இருவரும் சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதை கண்ட சக நண்பர்கள் கூச்சலிட்டததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஓடி வந்து அரை மணி நேரம் தேடி இருவரது உடல்களை சடலமாக மீட்டனர். தகவலறிந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆரணி ஆற்றில் பள்ளி விடுமுறையில் குளிக்கச் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ருத்தீஸ் மற்றும் கோகுல் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா