ஆரணி அருகே 2 குடிசைகள் தீக்கிரை: எம்எல்ஏ கோவிந்தராஜன் நிவாரண உதவி
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரணம் மற்றும் உதவித்தொகை வழங்கினார்.
ஆரணி அருகே மின் கசிவு காரணமாக கூலித்தொழிலாளி இரண்டு குடிசை வீடுகள் எரிந்து சாம்பல் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரணம் மற்றும் உதவித்தொகை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே உள்ள பாலவாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி மற்றும் அவரது மகன் பார்த்திபன் கூலி தொழிலாளர்கள் வழக்கம்போல் கூலி வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு குடும்பத்துடன் இருவரது குடிசை வீட்டிலும் நேற்று தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென நள்ளிரவு மின் கசிவு காரணமாக குடிசை தீப்பிடித்து ஏறிய தொடங்கியது. வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமி மற்றும் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனை அடுத்து லக்ஷ்மி என்பவரின் வீட்டில் இருந்த பீரோவில் 5 சவரன் தங்க நகை 1.80 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் சமையல் பாத்திரம் துணி மணி உள்ளிட்ட ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து பொன்னேரி தீயணைப்புத் துறை வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் .
தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்கள் இரண்டு குடும்பங்களுக்கு கும்மிடி பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் வட்டாட்சியர், ராமன் ஆகியோர் நேரில் சென்று குடிசை எரிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசின் நிவாரண உதவிகளை வழங்கினர். வீடுகளை இழந்த இருவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu