செங்கல் சூளை வெல்டிங் பணியில் மின்சார விபத்து: 2 தொழிலாளர்கள் பலி

செங்கல் சூளை வெல்டிங் பணியில் மின்சார விபத்து: 2 தொழிலாளர்கள் பலி
X

விபத்து நடந்த செங்கல் சூளை அருகேயுள்ள வெல்டிங் பட்டறை.

பெரியபாளையம் அருகே, செங்கல் சூளையில் வெல்டிங் பணியில், இரும்பு தகடு மிதித்ததில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் தனியார் செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு, செங்கல் சூளையில் கொட்டகை அமைப்பதற்காக வெல்டிங் பணி நடந்துள்ளது.

இன்று காலையில், வழக்கம் போல பணிகளை மேற்கொள்ள செங்கல் சூளை தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்போது வெல்டிங் பணிகளுக்காக போடப்பட்டிருந்த தகரங்களை மிதித்ததில், தொழிலாளர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடலில் மின்சாரம் பாய்ந்ததில், திருவண்ணாமலையை சேர்ந்த ரமணா (23), பிரசாந்த் (22) ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, பெரியபாளையம் போலீசார் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!