பெரியஒபுளாபுரம் கூட்டுறவுவங்கியில் 1.28 கோடி கடன் தள்ளுபடி

தமிழகத்தில் திமுக தேர்தல் வாக் குறுதியாக பதவியேற்றவுடன் 5 சவரன் வரை நகை அடமானம் தள் ளுபடி செய்வதாக தேர்தல் வாக்கு றுதியாக அறிவித்திருந்தது.
அதன்படி பதவியேற்றவுடன் தமிழ கம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு சங்கம் வங்கிகளில் ஏழை எளியோ ர் அடமானம் வைத்திருந்த நகை கடன்களை தள்ளுபடி செய்து அவ ரது நகைகளை திரும்ப அளித்து வந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவ ட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன் றியத்துக்கு உடபட்ட பெரிய ஒபுளாபுரம் ஊராட்சி எலாவூர் பகுதியில் உள்ள பெரிய ஒபுலபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன்சங்க ஜி 13 88 வங்கியில் 218 பயனாளி களின் அடமானம் வைத்திருந்த நகைகளை 1.கோடி28லட்சத்து 18 ஆயிரத்து 378 ரூபாயை தள்ளுபடி செய்து அவரது நகைகளை திரு ம்ப அளித்தது.
இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சேர்மேன் சிவகுமார்,கூட்டுறவு சங்க தலைவர் முல்லைவேந்தன், மாவட்ட கவுன்சிலர் ராமானுஜம், திமுக அவைத்தலைவர் வேதாச லம்,பெரிய ஒபுலபுரம் ஊராட்சி மன்றதலைவர்செவ்வந்திமனோஜ் வார்டு உறுப்பினர் ராஜா,வங்கி மனேஜர் சந்திரசேகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நகை களைப் பெற்ற பொதுமக்களுக்கு திரும்ப அளித்தனர். நகைகளைப் பெற்ற பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்துச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu