வாகன தணிக்கையின் போது 1.2கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

வாகன தணிக்கையின் போது 1.2கிலோ கஞ்சா பறிமுதல்;  இருவர் கைது
X

பைல் படம்

ஆரம்பாக்கம் போலீசார் வாகன தணிக்கையின் போது 1 கிலோ 200கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்படடது. கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை மடக்கி சோதனை சோதனையிட்டதில் அப்பேருந்தில் ரெட்டில்ஸை சேர்ந்த குணசேகரன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் சூளூர்பேட்டையில் இருந்து 1கிலோ 200கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!