2 லாரிகளில் கடத்தி வரப்பட்ட 10 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்; 4 பேரை கைது செய்த போலீசார்

2 லாரிகளில் கடத்தி வரப்பட்ட 10 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்;  4 பேரை கைது செய்த போலீசார்

பத்து டன் குட்காவுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு இரண்டு லாரிகளில் கடத்தி வந்த 10 டன் குட்கா போதைப் பொருட்களை போலீசார் லாரிகளுடன் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10டன் பான் மசாலா பொருட்களுடன், இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட இந்த பான்மசாலா பொருட்களின் மதிப்பு சுமார் 50லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வழியே சென்னைக்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் லாரியில் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த 3.கன்டெய்னர் லாரிகளை மடக்க முற்பட்ட போது நிற்காமல் வேகமாக சென்றன.

காவல்துறையினர் தொடர்ந்து விரட்டி சென்று லாரிகளை மடக்கினர். லாரிகளை கொண்டு வந்து தீவிர சோதனை மேற்கொண்டதில் ஒரு லாரியில் மட்டும் மருந்து பொருட்கள் இருந்த நிலையில் எஞ்சிய 2.லாரிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

இரண்டு லாரிகளில் சுமார் 50லட்சம் ரூபாய் மதிப்பிலான 10டன் இடை கொண்ட குட்கா பான் மசாலா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் கடத்தல் தொடர்பாக நரேஷ் ( வயது 27), தினகரன் ( வயது 48), அரவிந்த் பாண்டே ( வயது 39), சங்கரன் ( வயது 40). ஆகிய 4பேரை கைது செய்து சிப்காட் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story