கும்மிடிப்பூண்டி அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1கோடி கடனுதவி
மெய்யூர் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நூறு லட்சம் கடன் உதவிக்கான காசோலைகளை சட்டமன்ற உறுப்பினர் டி. ஜெ. கோவிந்தராஜன் வழங்கல்.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சியில் இயங்கி வரும் குறிஞ்சி மகளிர் சுய உதவி குழு, மல்லி மகளிர் சுய உதவி குழு, தமிழச்சி சுய உதவிக் குழு, தமிழ் மகள் சுய உதவிக் குழு, வெளிச்சம் சுய உதவி குழு, மரிக்கொழுந்து சுய உதவி குழு முல்லை மகளிர் சுய உதவி குழு, உள்ளிட்ட ஏழு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மெய்யூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரூ.41. லட்சத்து 46 ஆயிரத்து 600 ரூபாயும், கால்நடை பராமரிப்பு கடன் ரூபாய்58லட்சத்து 54.ஆயிரம் கடன் வழங்கும் நிகழ்ச்சி மெய்யூர் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் நடைபெற்றது.
ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி ஏழுமலை தலைமை வகித்தார். பூண்டி ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் மோதிலால் மகாலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா சரத் பாபு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மீனா பிரகாஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு தமிழக மக்கள் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதன் காரணத்தை குறித்து. திமுக அரசு அமைந்த உடன் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்திக் காட்டும் ஒரே அரசு திமுக தான் என்றும், வாக்குறுதிகளை வெறும் வார்த்தை அல்லாமல் செயலில் காட்டும் அளவிற்கு நம் முதல்வர் ஓயாமல் மக்களுக்காக பணியாற்றி வருகிறார் என்று எடுத்துக் கூறி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜான் பொன்னுசாமி, ஒன்றிய அவைத் தலைவர் சக்கரவர்த்தி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் மு. மணிபாலன், பேரிட்டிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தில்லை குமார், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், தகவல் தொழில்நுட்ப அணியைச் சார்ந்த யுகேந்தர், மெய்யூர் தொடக்க வேளாண்மை கடன் சங்க செயலர் கே.ஏழுமலை, சார் பதிவாளரும் செயலாட்சியருமான விஜய் சரவணன், இளையராஜா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.டி. மணி, எம்.சி. ராஜா, ஊராட்சி செயலர் டில்லிபாபு, மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu