கும்மிடிப்பூண்டி தேர்தலில் முறைகேடு: வேட்பாளர்கள் பரபரப்பு புகார்

கும்மிடிப்பூண்டி தேர்தலில் முறைகேடு: வேட்பாளர்கள் பரபரப்பு புகார்
X

கும்மிடிப்பூண்டியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக புகார் அளிக்க வந்த வேட்பாளர்கள்.

கும்மிடிப்பூண்டி உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக வேட்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரமும், வாக்கு எண்ணம் இயந்திரமும் மாறி மாறி இருந்ததால் சாவடியில் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்ட இயந்திரமும் ஒரே இயந்திரம் இல்லை எனக்கூறி 5-வார்டுகளை சேர்ந்த 11 வேட்பாளர்கள் கும்மிடிப்பூண்டி தேர்தல் நடத்தும் அதிகாரி யமுனாவிடம் மறுதேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினர்.

மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றம் செய்யப்பட்டபோது வேட்பாளர்களுக்கு தெரிவிக்காமல் தேர்தல் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதாகவும், அதேபோல் வாக்கு இயந்திரம் பழுதடைந்த நிலையில் எந்திரத்தை மாற்றும்போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்தார்களா எனவும், பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும, ஈவிஎம் இயந்திரம் சரியாக செயல்படுகிறதா இல்லையா என வேட்பாளர்களுக்கு மாதிரி காண்பிக்கப்பட்ட சிசிடிவி பதிவுகளை சரி பார்த்து உரிய நடவடிக்கை தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story