குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை துவக்கி வைத்து, நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ!

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை துவக்கி வைத்து, நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ!
X
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் சுமார் ரூ. 6,60,000 மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் சுமார் ரூ. 6,60,000 மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்; ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் 6,60,000 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் திறந்து வைத்தார். பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள், கோவில் புரோகிதர்கள், குருக்கள், நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்களுக்கு காய்கறி அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினார். இதில் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.

Tags

Next Story