ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது

ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற  இருவர் கைது
X
எளாவூர் சோதனைசாவடியில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், 2 பேர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் சோதனைசாவடியில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது - கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்காக அரசு சார்பில் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை நியாயவிலை கடைகள் மூலமாகவும் தரகர்கள் மூலமாகவும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரிசியை வாங்கி டன் கணக்கில் லாரிகள், வேன்கள் மூலமாகவும் ஆந்திராவுக்கு கடத்துவது தொடர்கதையாக இருக்கிறது.

இந்நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கு குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர எல்லையோர சோதனையான எளாவூர் சோதனைச் சாவடியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கும்மிடிப்பூணயில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் 71மூட்டைகள் கொண்ட 3550 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் கும்முடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார ரேஷன் கடைகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி அதனை ஆந்திராவுக்கு கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து இந்த கடத்தலில் ஈடுபட்ட வீரமணி மற்றும் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 3550 கிலோ ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தியவை வேனை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai future project