எளாவூர் சோதனைச் சாவடியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது!

X
By - Saikiran, Reporter |17 Jun 2021 10:36 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனைச் சாவடியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது - போலீசார் விசாரணை.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை சோதனை செய்ததில் அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்பு அவரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu