பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு!

பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு!
X
ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு.

ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (21) வெல்டர் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி (19) இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. தற்போது ஜெயந்தி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. சரண்ராஜ் நேற்று ஆவடியில் உள்ள தனது நண்பரான பாலமுருகன் என்பவருடன் ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியில் சாலையோரம் உள்ள பாழடைந்த பொது கிணற்றில் மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

சுமார் 25 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் நிறைந்து இருந்தது. அப்போது சரண்ராஜ் திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி நீண்ட நேரத்திற்கு பிறகு சரண்ராஜை பிணமாக மீட்டனர். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!