திருமுல்லைவாயிலில் மின்சாரம் தாக்கி பெண் பலி

திருமுல்லைவாயிலில் மின்சாரம் தாக்கி பெண் பலி
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வார்டு மேலாளர்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வார்டு மேலாளராக பணியாற்றியவர், வீட்டில் துணி துவைக்கும் போது மின்சாரம் தாக்கி பலி

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், ஸ்ரீநகர் காலனி, ஜான்சிராணி தெருவை சேர்ந்தவர் ஜெகன்குமார் (40). இவர், ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பைரவி(34). சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வார்டு மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 13ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு 2மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று பைரவி வீட்டு முன்பு மின்மோட்டார் அருகில் அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது, அவரது கை மின்மோட்டார் வயரில் பட்டு மின்சாரம் தாக்கி உள்ளது. இதில், அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது சத்தம் கேட்டு கணவர் ஜெகன்குமார் மற்றும் மகன்கள் ஓடி வந்தனர். பின்னர், அவர்கள் பைரவியை மீட்டு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அம்பத்தூரில் தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன் பிறகு, அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பைரவி வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில், திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த பைரவிக்கு இன்னும் சில மாதங்களில் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ள நிலையில் இன்று பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!