அமைச்சர் உதயநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள்

அமைச்சர் உதயநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள்
X
பருத்திப்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை விழா முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆவடி அருகே திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்சி நிர்வாகிகள் இலவச கல்வி உபகரணங்கள் மற்றும் மதிய உணவுகளை வழங்கினர்..

திமுக இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் நலத்திட்டங்கள் வழங்கி விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பருத்திப்பட்டு ஆதிதிராவிடநலத் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆவடி 47.வது மாமன்ற உறுப்பினர் அழகு விஜயா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 47வது வார்டு வட்ட கழக செயலாளர் வின்செண்ட், தலைவர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா பென்சில் நோட்டு புத்தகம் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கியதுடன் மதிய உணவுகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் முருகப்பன், நாகராஜ், பொருளாளர் ஏழுமலை, மற்றும் கட்சி நிர்வாகிகள் ஜான்சன், கார்த்திக், பாலசுப்ரமணியன், மோகன், ராஜேஸ்வரன்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!