உயிரை பணையம் வைத்து உடல்களை எரிக்கிறோம் - பணியாளர்கள் வேதனை!

உயிரை பணையம் வைத்து  உடல்களை எரிக்கிறோம் - பணியாளர்கள் வேதனை!
X

கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களை எரிக்கும் பணியாளர்கள்.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை உயிரை பணையம் வைத்து எரிக்கிறோம் என்று பிணம் எரிக்கும் பணியாளர் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து, உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சாதாரண நாட்களை விட தற்போது, உயிரிழப்புகளின் உடல்களை தகனம் செய்ய வரிசையில் காத்து நிற்கும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து பிணம் எரிக்கும் பணியாளர்கள் கூறுகையில்:

உடல்நிலை குறைவால் இறந்தவர்களின் உடலை விட கொரோனாவால் இறந்தவரின் உடல் எண்ணிக்கை அதிகமாக வருவதாக கூறிய அவர், சாதாரண நாட்களில் ஒரு மாதத்தில் தகனம் செய்ய கூடிய உடல்களை மூன்றே நாட்களில் வருவதாக தெரிவிக்கின்றனர்.

கொரோனா இருப்பவர்களின் அருகில் செல்வதற்கு கூடப் பயப்படுகின்றனர். ஆனால் நாங்கள் அதற்கெல்லாம் கவலைப்படாமல், உடல்களை எரித்துக் கொண்டே இருப்பதால் ஏற்படும் வெப்பத்தால் பிணங்களை எரிப்பதில் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

கொரோனா பரவல் குறைந்தால் மட்டுமே பணிகளில் ஏற்படும் சிரமம் குறையும் என தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்