ஆவடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்: அமைச்சர் துவக்கி வைப்பு
ஆவடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் துவக்கி வைத்தார்.
ஆவடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் துவக்கி வைத்தார்.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2வது டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கும் இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம்முகாமை தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சாமு. நாசர் துவக்கி வைத்து பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் பூந்தமல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் செந்தில்குமார், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஜவஹர்லால், மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் ஆறுமுகம், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu