ஆவடி அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது

ஆவடி அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது
X
ஆவடி அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதி, அயப்பாக்கம் ஐயப்பன் நகர், ஜீவானந்தம் தெருவில் சேர்ந்தவர் டானியல் ராஜ். வழக்கம்போல் இவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை கடந்த 6ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு, ஒருமணி நேரம் கழித்து 9 மணிக்கு பார்க்கும்போது, அவருடைய இரு சக்கர வாகனம் காணாமல் போய்விட்டது.

உடனடியாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருமுல்லைவாயில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, காணாமல் போன ஆர் எக்ஸ் எமகா வாகனம், வள்ளி பேலஸ் அருகே பார்த்ததாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் வாகன சோதனை காவல்துறையினர் பலப்படுத்தினார்.

அப்பொழுது அளவுக்கு அதிக வேகத்தில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் முன்னுக்குப்பின் தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரை காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர் பெயர் விஜி என்றும் ஜி கே எம் காலனி கொளத்தூர் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. வாகனத்தை திருடியதை ஒப்புக் கொண்டார். வாகனத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்