திருவேற்காட்டில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இருவர் கைது

திருவேற்காட்டில் கத்தியை காட்டி மிரட்டி  வழிப்பறி செய்த இருவர் கைது
X
திருவேற்காட்டில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது செய்ப்பட்டனர். இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்ப்பட்டன.

சென்னை செங்குன்றம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஜோன்ஸ் (21). இவர் அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஜோன்ஸ் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் நிறுவனத்தின் எதிரில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்த போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் கத்தியை காட்டி ஜோன்ஸிடம் செல்போன் பறிக்க முயற்சி செய்துள்ளனர்.

உடனே ஜோன்ஸ் நிறுவனத்திற்குள் நுழைந்து விடவே, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 சக்கர வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார். அப்போது ஜோன்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்து தட்டிக் கேட்கவே மீண்டும் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் ரூ. 500 பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஜோன்ஸ் திருவேற்காடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, திருவேற்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்ததில் கீழ் அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரதீப் (20), மதுரவாயில் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த சரத்குமார் (22) என்பது தெரியவந்தது.'

இதனையடுத்து 2 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் பிரதீப் மீது திருவேற்காடு மற்றும் மதுரவாயல் காவல் நிலையங்களில் 2 அடிதடி வழக்குகள் உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!