ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
X

பூட்டு உடைக்கப்பட்ட கடை.

திருவொற்றியூர் பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்தது கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருபவர் வசந்த் லால்(39). இவர் திருவொற்றியூரில் உள்ள சரஸ்வதி நகரில் கோமால் என்ற பெயரில் அடகு கடை ஒன்று நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்க முற்பட்டு முடியாமல் கொள்ளையர்கள் சென்றுள்ளது தெரிய வந்தது

இதேபோன்று திருவொற்றியூரின் பகுதியில் வசித்து வருபவரான தங்கமாரியின் வீட்டை உடைத்து உள்ளே சென்று சுமார் 1.1/2 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், டைட்டன் கைகடிகாரம் என மொத்தம் ரூ.5, 50, 000 மதிப்பிலான பொருட்கள் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில், ஒரே பகுதியில் இரு வெவ்வேறு இடங்களில் நடைப்பெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!