டிராக்டர் மீது லாரி மோதி விபத்து; டிரைவர் பலி-லாரி டிரைவர் கைது!

டிராக்டர் மீது லாரி மோதி விபத்து; டிரைவர் பலி-லாரி டிரைவர் கைது!
X

லாரி மோடி டிராக்டர் கவிழ்ந்து கிடப்பதை காணலாம்.

ஆவடி அருகே அதிவேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருவள்ள்ளுர் மாவட்டம் ஆவடி, ராஜீவ்காந்தி நகர், 3வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவர் தண்ணீர் டிராக்டர் ஓட்டி வந்தார். இந்நிலையில், இன்று மாரிமுத்து செங்குன்றத்தில் தண்ணீர் பிடிக்க டிராக்டரை ஓட்டிச் சென்றார்.

டிராக்டரில் தண்ணீரை நிரப்பி கொண்டு மீண்டும் ஆவடி நோக்கி கொண்டிருந்தார். வண்டலூர் -மீஞ்சூர் 400அடி வெளி வட்ட சாலை, ஆவடி அருகே காட்டூர் பகுதியில் வந்து கொண்ருந்தபோது, பின்னால் மீன் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அதிவேகமாக வந்து டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்து மாரிமுத்து அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை சேர்ந்த மாரியப்பன் (51) என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story
what can we expect from ai in the future