திருவள்ளூர்: ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய தலைமை காவலர் - மனைவி!
ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் தலைமைக்காவலர் சிவகுமார்.
தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் சாலைகளில் வசிப்போர், ஏழைகள் துயர் துடைக்க பல்வேறு அமைப்பினர், சங்கத்தினர், அரசியல் கட்சியினர் உணவு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூரில் காவலர் ஒருவர் தனது மனைவியுடன் இணைந்து உணவு வழங்கி பாராட்டுகளை பெற்று வருகிறார்.
தமிழ்நாடு காவல்துறை எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் சிவகுமார். இவரும், இவரது மனைவியும் இணைந்து காவல் பணியின் ஓய்வு நேரத்தில் பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயில், திருநின்றிவூர் ஆகிய பகுதிகளில் ரோடுகளில்உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.இவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu