திருவேற்காடு: முட்புதரில் பதுக்கிவைத்து மதுபானம் விற்ற இருவர் கைது!

திருவேற்காடு: முட்புதரில் பதுக்கிவைத்து மதுபானம் விற்ற இருவர் கைது!
X

திருவேற்காடு முட்புதரில் மது விற்றதான கைதான 2 பேர், பறிமுதல் செய்யப்பட்ட மது பானங்கள்.

திருவேற்காட்டில் முட்புதரில் மறைத்துவைத்து மதுபானம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் மதுப்பிரியர்கள் கள்ளச்சந்தையில் மது பானங்களை தேடி திரிவதும், வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் திருவேற்காடு பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக உதவி கமிஷனர் சுதர்சனத்துக்கு வந்த தகவலையடுத்து திருவேற்காடை அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் சோதனை செய்த போது சிலர் மதுபானங்களை வாங்கி சென்றனர். அவர்களிடம் விசாரித்தபோது முட்புதரில் மறைத்து வைத்து மதுபானம் விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த பார்த்திபன் (32), கண்ணன் (38), ஆகிய 2 பேரையும் கைது செய்தனைர். இவர்களிடம் இருந்து 20 பெட்டிகள் நிறைய சுமார் 960 மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இவர்கள் மதுபானங்களை எங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future