திருவேற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது

திருவேற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது
X
திருவேற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கால் மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ள நிலையில் சிலர் சட்டவிரோதமாக மொத்தமாக வாங்கி வைத்து, தற்போது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருவேற்காடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக திருவேற்காடு காவல்துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, விரைந்து சென்ற ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் அன்பு நகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரனை செய்தனர்.

அதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்புசாமி(20), மாரியப்பன் (29) ஆகிய இருவர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த 50 பீர் பாட்டில்கள் என மொத்தம் 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதில் 130 ரூபாய் விலையுள்ள 1 பாட்டில் 300 முதல் 400 வரையிலும், 150 ரூபாய் விலை கொண்ட பீர் பாட்டில் 500 முதல் 600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!