திருவேற்காடு: 50 நடமாடும் காய்கறி பொருள் வாகனம் தொடங்கி வைப்பு

திருவேற்காடு: 50 நடமாடும் காய்கறி பொருள் வாகனம்  தொடங்கி வைப்பு
X

திருவேற்காடு நகராட்சி சார்பில்  காய்கறி விற்பனைக்காக தயார் நிலையில் உள்ள வாகனங்கள்

திருவேற்காட்டில் நடமாடும் காய்கறி, மளிகை பொருள் என 50 வாகனங்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

முழு ஊரடங்கு காரணமாக திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சியில் நடமாடும் காய்கறி, மளிகை பொருள், பால் என 50 வாகனங்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார். பின்னர் தூய்மை பணியாளர்கள், விடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்வார்கள் நகராட்சி பணியாளர்களுக்கு ஆலோசனை செய்தனர்.

அப்போது பேசிய அவர் கொரோனா நோய் தொற்றை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக தெரிவித்த அவர், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வீடு தேடி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் கொரோனா நோய் தொற்று காலத்தில் தாய், தந்தை, மனைவி, கணவன் என யாரும் செய்ய முடியாததை முன் களப் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தெய்வத்திற்கு சமமானவர்கள் அனைவரும் இருகரம் கூப்பி வணங்குவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியாக நகராட்சி ஆணையர் வசந்தி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!