திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில்  ஸ்டாலின் பிறந்த நாள் விழா
X

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ஆவடி நாசர் நலத்தி்ட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்டம் முழுவதும் வெகு விமரிசையாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அமைச்சர் ஆவடி நாசர் மாவட்ட முழுவதும் கழகக் கொடியேற்றி ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக பாவல்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் கழகக் கொடியேற்றி ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பார்வையற்றோர் மற்றும் ஆதரவற்றோர் பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு நலத்திட்ட உதவிகள் வழங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்து நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக தொடங்கி வைத்தார்.

இதில் ஆவடி மேற்கு பகுதி 15 வது வார்டில் பகுதி கழகச் செயலாளர் பொன் விஜயன் தலைமையில் வட்டக் கழக செயலாளர் ராஜலிங்கம் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு 700 நபர்களுக்கு இலவச சேலை அறுசுவை உணவு மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதேபோல் ஆவடி மேற்கு வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க நிகழ்ச்சி பகுதி கழக செயலாளர்கள் ஜி.நாராயண பிரசாத் , ஜி.ராஜேந்திரன், பேபி சேகர் ஆகியோர் தலைமையில் கழக கொடியேற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறுசுவை உணவு வழங்கப்பட்டன.

இதில் மாநகரக் கழக மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகரக் கழகச் பொறுப்பாளர் சன்பிரகாஷ், ஆவடி மாநகராட்சி பணிக்குழு தலைவர் சா.மு.நா.ஆசிம்ராஜா மண்டல குழு தலைவர்கள் ஜோதிலட்சுமி, நாராயண, பிரசாத், வி. அம்மு, அமுதா பேபி சேகர், உள்பட மாநகர கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் கவுன்சிலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ஜி. ஆர். திருமலை ஏற்பாட்டில் பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் மாணவர்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆவடி நாசர் கலந்து கொண்டு இனிப்பு மற்றும் அறுசுவை பிரியாணி வழங்கினார். அதேபோல் பூவிருந்தவல்லி 18 வது வார்டில் நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் ஆகியோர் ஏற்பாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அறுசுவை உணவு வழங்கினார் இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, நகர் மன்ற துணைத் தலைவர் க.ஸ்ரீதர், நகர கழக நிர்வாகிகள் தாஜ்ஜுன், துரைபாஸ்கர், அப்பர ஸ்டாலின், டில்லிராணி மலர்மன்னன், பூவை அசோக்குமார் புண்ணியங்கோட்டி, அன்பழகன், சௌந்தரராஜன் ஜெ.சுதாகர் உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ் தலைமையில் அவைத்தலைவர் அண்ணாமலை மாவட்ட பிரதிநிதி பிரகாஷ் நிர்வாகி சண்முகம் ஆகியோர் ஏற்பாட்டில் சென்னேரிகுப்பம் பகுதியில் நடைபெற்றது .இதில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் கலந்து கொண்டு அறுசுவை உணவு 700 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகம் உள்ளிட்ட எழுது பொருட்கள் மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம். முத்தமிழ் செல்வன், வி.குமார், மாவட்ட கவுன்சிலர் ஏஜி.ரவி, நிர்வாகிகள் ஏ.ஜனார்த்தனன் , புகழேந்தி எம்.இளையான், ஏ.ஆர். பாஸ்கர், பிரபாகரன், ராஜாராம், வெங்கடேஷ், மதி, மூர்த்தி, வாசு, சுகன், பன்னீர் பி.ஜே.பி.பிரதீப் பரிமளழகன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மற்றும்

ஆவடி தொகுதி நடுக்குத்தகை ஊராட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் நடுகுத்தகை கே.ஜெ.ரமேஷ் ஏற்பாட்டில் ஒன்றிய கழகச் செயலாளர் டி.தேசிங்கு தலைமையில் முதியோர்களுக்கு இலவச புடவை அறுசுவை உணவு ,குடை , காலனி அரிசி மூட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் உடன் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் யமுனா ரமேஷ் , நிர்வாகிகள், வழக்கறிஞர் ஆர்.எஸ்.ராஜராஜன், இ.கந்தபாபு , சி.அண்ணா குமார், ஜெ. சாக்கரடிஸ், கந்தன் , தலைவர் லட்சுமி துணைத்தலைவர் செந்தாமரை, கப்பல் கே.சுரேஷ்குமார், நடுகுத்தகை எம்.மோகன், ஜி.சி.சி.கருணாநிதி, ஜிபி பரணிதரன், பிரவீன் குமார், சந்திரன், அரி, மோகன், நவமணி, சாந்தகுமாரி தனலட்சுமி, உதயா , ராதாகிருஷ்ணன் , தேவராஜ் உள்பட பலர் உள்ளனர்

திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக பொருளாளர் பா.நரேஷ் குமார் ஏற்பாட்டில் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள பால விகாஹர் மன வளர்ச்சி குன்றிய இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கினார் அதேபோல் திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் சே.பிரேம் ஆனந்த் ஏற்பாட்டில் பாக்கத்தில் உள்ள சேவாலயா ஆதரவற்றோர் பள்ளியில் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜி.விமல் வர்ஷன் நிர்வாகிகள் ஜெயராமன், ரமேஷ், மு.ராஜா, மகேஸ்வரி பால விநாயகம், குட்டி(எ) பக்தவச்சலம், ஆர்.திலீப்ராஜ், சேகர், ஆர்.ராஜ், கு.கருணாகரன், பார்தீபன், வ,ஹரி, குமரேசன், சுரேஷ்பாபு, அரவிந்த் குமார், ஆர்.ராஜேஷ், ராமானுஜம், மணிகண்டன், ஜெயபால், தமிழ்வாணன், வி.ஜெ.நரசிம்மன், மோதிஸ்,உள்பட பலர் உள்ளனர்

திருநின்றவூர் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் தி.வை. ரவி தலைமையில் 27 வார்டுகளில் தி.மு.க. கொடியேற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் நகர்மன்ற தலைவர் உஷாராணி ரவி துணை தலைவர் சரளா நாகராஜ் மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் உள்பட கவுன்சிலர்கள் வட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்

திருவள்ளூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ஜெயசீலன் தலைமையில் ஒன்றிய முழுவதும் கழகக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பல்வேறு திட்ட உதவிகள் வழங்கி களம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.எம்.சொக்கலிங்கம் ஏற்பாட்டில் காலை உணவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .

திருவள்ளூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் 13 ஊராட்சிகளில் ஒன்றிய கழக செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு அறுசுவை வழங்கினார்கள். உடன் ஒன்றிய அவைத் தலைவர் பர்க்கத்துல்லாகான், மாவட்ட கவுன்சிலர் டி.தென்னவன் ஒன்றிய நிர்வாகிகள் மனோகரன், மதுரை வீரன், விமலா குமார், பிராங்கிளின் வேலாயுதம், முகமது ரஃபி உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story