பிரிட்ஜிலும் ஷாக் அடிக்கும்: சிறுமி உயிரிழப்பு- எச்சரிக்கை தேவை

பிரிட்ஜிலும் ஷாக் அடிக்கும்: சிறுமி உயிரிழப்பு- எச்சரிக்கை தேவை
X

உயிரிழந்த சிறுமி ரூபாவதி.

ஆவடி அருகே குளிர்சாதன பெட்டி திறந்த பொழுது மின்சாரம் தாக்கி 5வயது சிறுமி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆவடி அருகே விளையாடிக் கொண்டிருந்த 5வயது சிறுமி குளிர்சாதன பெட்டியை திறக்கும் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நந்தவன மேட்டூர்,நேதாஜி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கவுதம் (வயது 29). இவர் மகளிர் சுய உதவி குழுவுக்கு லோன் வாங்கி தரும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிரியா (வயது 25) உள்ளார். இத்தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் ரூபாவாதி (வயது5) என்ற சிறுமி தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று மாலை ரூபாவாதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டில் இருந்த குளிர்சாதனை பெட்டி திறந்து போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சிறுமி மயக்கமடைந்தாள்.

அருகில் இருந்த தாய் பிரியா மகளை மீட்டு அருகிலுள்ள ஆவடி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.அங்கு மருத்துவர் பரிசோதனை செய்ததில் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவடி காவல்துறையினர் சிறுமி இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளிர்சாதன பெட்டியை திறந்த பொழுது மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாபமாகமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது