ஐயப்பன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

ஐயப்பன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
X

உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது

ஆவடி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஐயப்பன் கோவில் உண்டியல் மர்மநபர்களால் உடைக்கப்பட்டு சுமார் 3 லட்சம் ரூபாய் கொள்ளை

ஆவடி பேருந்து நிலையம் அருகே ஐயப்பான் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரும் 13ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அன்னதானத்திற்கு உண்டியல் அமைத்து பக்தர்களிடம் காணிக்கை வசூலித்து வருகின்றனர். நேற்று இரவு 9:30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு கோவிலை திறந்து பார்த்த போது கோவில் உண்டியல் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

20 அடி உயரம் உள்ள இரும்பு (கேட்) கதவின் மேலே ஏறி கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கு இருந்த கண்காணிப்பு கேமராக்களை துணி வைத்து மூடிவிட்டனர். அன்னதானத்திற்கு என்று வசூலிக்கப்பபட்ட உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future