ஆவடியில் மாநகராட்சி பெண் ஊழியர்கள் திடீர் சாலை மறியல்

ஆவடியில் மாநகராட்சி பெண் ஊழியர்கள் திடீர் சாலை மறியல்
X

ஆவடி மாநகராட்சி  பெண் ஊழியர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

ஆவடியில் மாநகராட்சி பெண் ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அதிகாரிகளிடம் பேசும் பெண்களை தவறாக செய்தி வெளியிட்ட பத்திரிகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதாரா அலுவலர் மற்றும் பெண் ஊழியர்கள் குறித்த கருத்தை பத்திரிகை ஒன்றில் அச்சிடப்பட்டு அதை சமூக வளைத்தளங்களில் பரவி வந்தது.. இதற்கு கண்டனம் தெரிவித்து ஆவடி மாநகராட்சியில் பணியாற்றி வரும் 50.க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் திடிர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்..
அப்போது பத்திரிகையாளர் என கூறி பெண்களை குறித்த தரம்குறைவாக செய்தி வெளியிட்டு அதனை சமூக வளைத்தளங்களில் பதிவிட்ட சாமுராய் என்ற பத்திரிகை செய்தியாளரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வந்த ஆவடி காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்களிடம் புகாரை பெற்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெயரில் மாநகராட்சி பெண் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்..
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பெண்கள் கூறுகையில் பெண்களைப் பற்றி இழிவாக எழுதி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்ட செய்தியாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் இது போன்ற தவறான செய்திகளை இனிமேல் வெளியிட கூடாது என்று அவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர் .

Tags

Next Story