முன்கள பணியாளர்களுக்கு புறநகர் ரயில்சேவை; தென்னக ரயில்வே அறிவிப்பு!

முன்கள பணியாளர்களுக்கு புறநகர் ரயில்சேவை; தென்னக ரயில்வே அறிவிப்பு!
X
முன்கள பணியாளர்களுக்கான புறநகர் ரயில் புதிய அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் பணிக்குச் செல்லும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் புறநகர் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றனது. இந்த ரயில் இன்று முதல் புதிய அட்டவணைப்படி இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மூர் மார்க்கெட்டில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணிக்கு 42 சேவைகளும் மறு மார்க்கமாக 44 சேவைகளும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி சூளூர்பேட்டைக்கு 16 சேவைகளும், சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு 12 ரயில் சேவைகளும் இயக்கப்படும்.

வேளச்சேரி- சென்னை கடற்கரைக்கு 12 முறையும், சென்னை கடற்கரை இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வரை இரு மார்க்கங்களிலும் தலா 33 முறை ரயில்கள் இயக்கப்படும். மொத்தம் 208 சேவைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படுகிறது. ஞாயிறு இயக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!