ஆவடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம், கராத்தே, யோகா போட்டிகள்

ஆவடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம், கராத்தே, யோகா போட்டிகள்
X

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிஆர்பிஎப் கமாண்டர் பரிசு வழங்கினார்.

ஆவடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் கராத்தே யோகா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஆவடி அருகே மாநில அளவிலான சிலம்பம் .கராத்தே . யோகா போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சி ஆர் பி எஃப் கமாண்டர் நர்வின் சிங் கோப்பைகளும் சான்றிதழும் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த வாணியம் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேப்பா அகடாமியின் பயிற்சியாளர் சங்கீதா ராஜா நிகழ்ச்சி ஏற்பாட்டில் மாநில அளவிலான சிலம்பம் . கராத்தே . யோகா போட்டி நடைபெற்றது.இப்போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக சி ஆர் பி எப் கமாண்டர் நார்வின் சிங் குரூப் சென்டர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி போட்டியினை துவங்கி வைத்தார்.


போட்டியில் ஐந்து வயது முதல் 20 வயது வரை சிலம்பம் சுற்றி அசத்தல்மற்றும் கராத்தே போட்டி 3 வயது முதல் 20 வயது அதேபோல் யோகா பயிற்சியில் மூன்று வயது முதல் 20 வயது வரை மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி காட்டினர்.

இப்போட்டியில் ‌சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், மதுரை ,சேலம், கோயம்புத்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதியில் இருந்து,கலந்து கொண்ட மாணவ மாணவிகள் இப்போ போட்டியில் தங்களது தனி திறமைகளையும் பெண்களுக்கு பாதுகாப்பான கலைகளான சிலம்பம் சுற்றுதல் சுய சிந்தனை பயிற்சி மற்றும் பெண்களுக்கு தற்காப்பு கலைபோன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சி ஆர் பி எப் கமாண்டர் நார்வின் சிங் மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும் கோடயங்களும் சான்றிதழும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். போட்டியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india