பட்டாபிராமில் மாநில அளவிலான ஆணழகன்போட்டி: அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்

பட்டாபிராமில் மாநில அளவிலான ஆணழகன்போட்டி: அமைச்சர்  நாசர் துவக்கி வைத்தார்
X

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி பட்டாபிராம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஆணழகன் போட்டியில் தங்களது கட்டமைப்பான உடல்களை பல்வேறுவடிவங்களில் காண்பித்து தங்களது திறமைகளை வெளி காட்டினார்கள்.

ஆவடி அருகே தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் கனகு கிளாசிக் உடற்பயிற்சி கூடம் இணைந்தும் நடத்தும் பதினோரு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. முதல்முறையாக ஒரு லட்சம் காசோலை சாம்பியன் ஆப் சாம்பியன் விருது வழங்கப்பட்டது.

இதில் வெற்றி பெறும் நபர்கள் மிஸ்டர் இந்தியாவுக்கு தேர்வு செய்யப்படடுகிறார்கள். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி பட்டாபிராம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடுஅமைச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் கனகு கிளாசிக் உடற்பயிற்சி கூடம் இணைந்து தமிழகத்திலேயே முதல்முறையாக1 லட்சம் சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியானது நடைபெற்றது. இதில் 11 பிரிவுகள் சீனியர் .மேன்பிசிக் .பிசிக்ஸ் ஓவரா சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிரந்து 272க்கும் மேற்பட்டவர் போட்டியில் கலந்து கொண்டனர்.

ஆணழகன் போட்டியில் தங்களது கட்டமைப்பான உடல்களை பல்வேறுவடிவங்களில் காண்பித்து தங்களது திறமைகளை வெளி காட்டினார்கள். இது சிறந்த தமிழகத்தின் ஆணழகனாக முதலிடம் பிடித்த ஈஸ்வரன் கும்பகோணம் மாவட்டம், இரண்டாவது இடம் நாமக்கல் மாவட்டம் சரவணன், மூன்றாம் இடம் பிடித்த காஞ்சிபுரம் மாவட்டம் ஆண்ட்ரூஸ். முதலிடம் பிடித்த ஈஸ்வருக்கு ஒரு லட்ச ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்தவருக்கு 25 ரூபாய் காசோலை மற்றும் மூன்றாமிடம் பிடித்தவருக்கு பத்து ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்கள் மிஸ்டர் இந்தியாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு நாசர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!