திருநின்றவூரில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

திருநின்றவூரில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்
X

திருநின்றவூர் பஜார் வீதியில் உள்ள கடை ஒன்றிற்கு அபராதம் விதிக்கும் அதிகாரிகள்.

திருநின்றவூரில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

நாடு முழுவதும் ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு வருகின்ற ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பிக்க உள்ளது. தமிழகத்திலும் இதற்கான நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த பேரூராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், திருநின்றவூர் பஜார் வீதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பையை உள்ளதா என்று திடீரென சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள மொத்த விற்பனை நிலையங்களில் மற்றும் மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். இதன்படி மொத்தம் 7200 ரொக்கத் தொகை வசூலிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி முகக் கவசம் அணியாமல் வியாபாரம் செய்த துணிகடை, காய்கறி கடை உள்ளிட்ட கடை வியாபாரிகளுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்ததுடன், முக கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும் சமூக இடைவெளி கடைபிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகள் துணை இயக்குனர் கண்ணன், திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பு ரவி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story