ஆவடி அருகே 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
சந்திரசேகர்.
Tiruvallur News -திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகவும், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு ஆய்வாளர் சுந்தராம்பாள்,உதவி ஆய்வாளர் நந்தினிஉஷா மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் நெமிலிச்சேரி வெளிவட்ட சாலை வடக்கு பிரகாசம் நகரில் ஒருவரது வீட்டை சோதனையிட்டனர்.
அப்போது அந்த வீட்டில் 50 கிலோ எடை கொண்ட 90 மூட்டைகளில் 4.5 டன் ரேஷன் அரிசி மற்றும் 900 கிலோ கோதுமை பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வீட்டில் இருந்த சென்னை புளியந்தோப்பு பி.கே காலனி சேர்ந்த சந்திரசேகர் (32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவர், ரேஷன் கடையில் அரிசி, பருப்புகளை சட்டவிரோதமாக விலைக்கு வாங்கி பதுக்கி வைத்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடமிருந்து 4.5 டன் ரேஷன் அரிசி மற்றும் 900 கிலோ கோதுமை ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu