இறைச்சிக் கடைக்கு சீல்: 10ஆயிரம் அபராதம்

இறைச்சிக் கடைக்கு சீல்: 10ஆயிரம் அபராதம்
X
திருவேற்காடு நகராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததோடு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

திருவேற்காடு நகராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததோடு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

கொரோனா பரவல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் 12 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் கடைகளின் திறப்பு 10 மணி ஆக குறைக்கப்பட்டது.

மேலும் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவேற்காடு நகராட்சி பகுதியில் நகராட்சி சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது அயனம்பாக்கம் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சிக் கடை செயல்பட்டு வருவதாக தகவல் வந்தது. தகவலையடுத்து திருவேற்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்ததோடு அங்கிருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி மண்ணில் புதைத்து அழித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!