பூட்டை உடைத்து 40ஆயிரம் கொள்ளை: எஸ்.ஐ மகன் கைது

பூட்டை உடைத்து 40ஆயிரம் கொள்ளை: எஸ்.ஐ மகன் கைது
X
திருமுல்லைவாயிலில் பால் கடையின் பூட்டை உடைத்து 40ஆயிரம் கொள்ளை; எஸ்.ஐ மகன் கைது.

திருமுல்லைவாயில் சோழம்பேடு சாந்திபுரம் பகுதியில் தங்கதுரை என்பவர் பால் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடித்துவிட்டு தங்கதுரை பூட்டிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். நள்ளிரவு 1 மணியளவில் இவரது கடையின் ஷட்டர் உடைக்க பட்ட சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்டு இதனையடுத்து அவர்கள் தங்கதுரைக்கு செல்போன் மூலமாக தகவல் கொடுத்தனர்.

பின்னர் அவர் தனது உறவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் வைத்திருந்த 40ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அருகில் உள்ள சி.டி.எச் சாலையில் ஆட்டோவில் ஒரு நபர் மதுபோதையில் அமர்ந்திருந்தவர் கையில் பணம் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உடனடியாக திருமுல்லைவாயல் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த அபிலாஷ் மற்றும் ஆவடி மோரை பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் என தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து தங்கதுரை கடையை உடைத்து பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

அவர்களிடமிருந்து 40 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து, வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!