பிரதமர் படம் அகற்றம்; மாநகர திமுக செயலாளராக இருந்த அமைச்சரின் மகன் பதவி நீக்கம்

மாநகர திமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய ஆவடி ஆசிம் ராஜா.
ஆவடி அருகே, சார் பதிவாளர் அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் பாரத பிரதமர் படங்களை அகற்றிய விவகாரத்தில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சாமு நாசரின் மகன் ஆசிம் ராஜாவை, ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்த கட்சி தலைமை, அவருக்கு பதிலாக சன் பிரகாஷை நியமித்து அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், தமிழக பால்வளத் துறை அமைச்சருமான ஆவடி சாமு நாசர், இவரது மகன் ஆசிம் ராஜா, இவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆவடி மாநகர கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார் இது மட்டுமல்லாமல், ஆவடி திமுக மாநகர செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
சமீபத்தில், ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பாரத குடியரசுத்தலைவர் திரவுபதி மும்மு, மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது படங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் படங்களை ஆசிம் ராஜா அகற்றியதாக கூறப்படுகிறது
இதுகுறித்து பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தும். ஆசிம் ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அமைச்சர் மகன் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது இது குறித்து பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயண திருப்பதி, தொடர்ந்து இந்த பிரச்சனை குறித்து வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், ஆவடி மாநகர திமுக செயலாளர் கட்சி பொறுப்பில் இருந்து ஆசிம் ராஜாவே நீக்கி, அவருக்கு பதிலாக ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவிக்கு சன்பிரகாசை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu