தூய்மை பணியாளர்களுக்கு ரெயின்கோட் வழங்கல்

ஆவடியில் துாய்மை பணியாளர் 146 பேருக்கு, ரெயின்கோட் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்ப்பட்ட 48 வார்டுகளில் 82267 குடியிருப்புகளுக்கு சொத்துவரி விதிக்கப்பட்டு, வரி வசூலிக்குக் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆவடி மாநகராட்சிக்கு உட்ப்பட்ட 48 வார்டுகளில், குடியிருப்புகளுக்கு சொத்துவரி விதிக்கப்பட்டு வரி வசூலிப்பதற்காக நான்கு பகுதிகளில் வரி வசூலிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டது. இதில் ஆவடி மாநகராட்சி அலுவலகம், திருமுல்லைவாயல், காமராஜநகர், பட்டாபிராம், இனி வரும் காலங்களில் வரி வசூலிக்கும் பணிகள் இந்தப் பகுதிகளில் நடைபெறும். 48 வார்டுகளுக்கு நான்கு மையங்கள் மட்டுமே உள்ளதால், பொது மக்கள் வரிசையில் காத்திருந்து வரி செலுத்தகூடிய சூழல் உள்ளது.
இதனை குறைக்கும் விதமாக, ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் கூடுதல் வரி வசூல் மையம், பருத்திப்பட்டு பூங்கா, மிட்டணமல்லி பள்ளிக்கூட தெரு, கோவில்பதாகை அம்மன் கோவில் தெரு, திருமுல்லைவாயல் குளக்கரை மாநகராட்சி சமூதாய கூடம் உள்ளிட்ட இடங்களில் வரி வசூல் மையங்கள் புதிதாக அமைக்கபப்ட்டுள்ளது.. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும் இந்த மையங்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, ஆவடி மாநகராட்சியின் நிரந்தர தூய்மை பணியாளர்களான 146 பேருக்கு மழைகாலங்களில் பயன்படுத்த கூடிய ரெயின் கோட்டை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், மாநகர செயலாளர் ஆசிம் ராஜா, ஆணையர் தர்ப்பகராஜ், உதவி வருவாய் அலுவலர்கள் ஜான் பாண்டியராஜ், இந்திராணி, திலகம், சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் பகுதி செயலாளர்கள் பேபி சேகர், பொன் விஜயன், ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu