ஆவடியில் ஆகஸ்டு 12 -ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

ஆவடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.
ஆவடி மாநகராட்சி பட்டாபிராம், இந்து கல்லூரியில் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். இளைஞர்கள் திறன் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம், இந்து கல்லூரியில் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்கள் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் உள்ள இந்துக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன்,ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, வருகிற 12-ம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை சிறப்பாக நடத்துவது குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர் கலந்தாலோசனை மேற்கொண்டு, ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பட்டாபிராம் இந்து கல்லூரி வளாகத்தில் வருகிற ஆகஸ்ட்- 12ஆம் நாள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பாக நடைபெற உள்ள இம்மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 150.க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்களின் சார்பாக 30,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களின் வேலை வாய்ப்பு மற்றும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் பதிவு ஆய்வற்றுக்கான வழிகாட்டுதலும் இம்முகாமில் இடம் பெற உள்ளன. TNSDC மற்றும் DDU-GKYஇன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகளும் இம்முகாமில் இடம் பெற உள்ளது
இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8.ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலும் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. இவ் வேலைவாய்ப்பு முகாமானது வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 9. மணி முதல் மதியம் 3. மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி இலவசம். ஆகையால், திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை நாடும் அனைத்து இளைஞர்களும் இவ்வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் அரசு துறைகளின் பல்வேறு துறைகள் சார்பாகவும்கேட்டுக்கொள்ளப் படுகிறது.
இந்நிகழ்வுகளில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் ஜோதிமணி, தொழிலாளர் நலத்துறை துணை இயக்குநர் திவ்யா, உதவி ஆணையர் (அமலாக்கம்) பி.ஷோபனா, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநர் விஜயா மாநில மாவட்ட நிர்வாகிகள் நடுகுத்தகை ரமேஷ், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், ஆவடி பகுதி செயலாளர் பேபி சேகர், ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயண பிரசாத், பொன்.விஜயன், மண்டல குழு தலைவர் ஜோதிலட்சுமி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu