திருவேற்காடு நகராட்சி மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு, பரிசு

திருவேற்காடு நகராட்சி மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு, பரிசு
X

திருவேற்காடு நகராட்சியில் அதிமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு திமுக நகர செயலாளர் மூர்த்தி பாராட்டி பரிசுகளை வழங்கினார். அருகில் நகராட்சி ஆணையர் வசந்தி.

திருவேற்காடு நகராட்சியில் அதிகமானோருக்கு, தடுப்பூசி செலுத்திய மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சியில் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கு காரணமாக இருந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை கௌவரவிக்கும் விதமாக நிகழ்ச்சி நகராட்சியில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு திருவேற்காடு திமுக நகர செயலாளர் என்.இ.கே மூர்த்தி தலைமை வகித்தார். இதில் மருத்துவர்கள் மற்றும் திருவேற்காடு நகராட்சி சுகாதார பணியாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருவேற்காடு நகராட்சி ஆணையர் வசந்தி, நகராட்சி பொறியாளர் நளினி மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!