ஆவடி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

ஆவடி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
X
ஆவடியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர்.
ஆவடி அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆவடி அருகே 17வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போஸ்கோவில் கைது செய்தனர்.

ஆவடி அடுத்த மோரை கிராமத்தில் தம்பதி ஒருவர் வசித்து வருகிறார். அவர்களுக்கு 17வயதில் மகள் உள்ளார் இந்நிலையில், கடந்த 16ந்தேதி சிறுமி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார்.

அவளை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, பெற்றோர் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், சிறுமியை திருமண ஆசைகாட்டி போரூர், ஆலப்பாக்கம், பாரதியார் நகர், கம்பர் முதல் தெருவைச் சார்ந்த கூலி தொழிலாளி முத்து (29) என்ற உறவினர் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து, போலீசார் இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசார் மோரையில் பதுங்கி இருந்த முத்துவை போலீசார் இன்று மாலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 17வயது சிறுமியை போலீசார் மீட்டனர். பின்னர், இருவரையும் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், முத்துவிற்கு திருமணமாகி மனைவி, 2குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில், முத்து உறவினரான சிறுமியிடம் பழகி வந்துள்ளார். பின்னர், அவரை திருமண ஆசைகாட்டி சம்பவதன்று திருப்பதிக்கு கடத்தி சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து அவரை கட்டாய தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு, அங்கு வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கி அவளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதற்கிடையில், போலீசார் தேடுவதை அறிந்த முத்து சிறுமியை மோரையில் உள்ள வீட்டிற்கு கொண்டு விட வந்துள்ளார். அப்போது முத்துவை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதனை அடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சிறுமி மாயமான வழக்கை போஸ்கோ சட்டத்தின்கீழ் பதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!