அரசு நிலத்தை மீட்டுத் தரக்கோரி ஜமாபந்தியில் கிராம மக்கள் கோரிக்கை மனு
அரசு நிலத்தை மீட்டுத் தரக்கோரி ஜமாபந்தியில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
ஆவடி அருகே தனிநபர் ஆக்கிரமிப்பு செய்த ரூபாய் 80 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும் என 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜமபந்தி கூட்டத்தில் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதி வெள்ளானுர் ஊராட்சியில் சுமார் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாக ஜமாபந்தி மக்கள் குறை தீர்ப்பு கூட்டமானது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, பிறப்பு, இறப்பு, புதிய ரேஷன் அட்டை கேட்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை மக்கள் அதிகாரிகளிடம் அளித்து தீர்வு கண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வெள்ளானுர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
ஒட்டுமொத்த மக்கள் அளித்த மனுவில், வெள்ளலூர் ஊராட்சி அரிக்கம்பேடு பகுதியில் அரசு பள்ளி உள்ளது. அதில் 1 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 11,12 வகுப்பு கல்வி பயில்வதற்கு வெகு தூரத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று பயின்று வரும் நிலை இருக்கிறது. வெகு தூரம் சென்று கல்வி பயில்வதற்கு மாணவர்கள் சிலர் சிரமப்பட்டு அவர்களின் கல்வி பாதியிலேயே நின்று விடுகிறது.
எனவே தாங்கள் வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரிக்கம்பேடு பகுதியில் அரசுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் இருப்பதாக அந்த நிலத்தை தனிநபர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாகவும், அந்த நிலத்தின் சந்தை மதிப்பு தற்போது சுமார் 80 கோடி ரூபாய் என்றும், அந்த நிலத்தினை மீட்டுத் தரக்கோரி பலமுறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனை மீறி கிராம மக்கள் அந்த இடத்தை பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு திருப்பித் தருமாறு கேட்டபோதெல்லாம் அவர்கள் அச்சுறுத்துவதாகவும், அந்த மனுக்களில் பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். எனவே மாணவர்களின் நலனை கருதி ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தினை மீட்டு பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் தெரிவிக்கையில் தாங்கள் பகுதியில் படிக்கின்ற குழந்தைகளுக்கு மேல்படிப்பிற்காக வெகு தூரம் சென்று படித்து வருவதால் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆர்வம் காட்டாததால், பெண் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி விடுவதாகவும், அதிகாரியிடம் பலமுறை தெரிவித்தும் அந்த நிலத்தை மீட்டு தர ஏன் தாமதம் செய்து வருவதாக எனவே தற்போது வழங்கிய மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu