வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு கேட்டு அதிமுக வழக்கறிஞர் பிரிவினா் மனு

வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு கேட்டு  அதிமுக வழக்கறிஞர் பிரிவினா் மனு
X
வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு கேட்டு ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மனு கொடுத்தனர்.

ஆவடி, அம்பத்தூர் அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு இன்று வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டி, ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மனு கொடுத்தனா். நடைபெற்றுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அடுத்து இன்று 22ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணப்படும் வாக்குகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தனர்.

ஆவடி காவல் ஆணையாளார் சந்தீப்ராய்ரத்தோரிடம் அதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் மற்றும் வழக்கறிஞர் பிரிவு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அறிவரசன் உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள் சார்பில், வாக்கு எண்ணும் மையமான அம்பத்தூர், ஆவடி திருவேற்காடு, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டி அதிமுக உட்பட சுயேச்சை வேட்பாளர்களுக்கு திமுகவினரால் கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டி மனு அளித்தனர்.

இதற்கு முன்னதாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் அம்பத்தூர் ஆவடிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் எனப்படும் வாக்குகளை விரைவாக எண்ணப்பட்டு உடனுக்கு உடன் வெற்றி அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனவும் ஒரு போதும் தாமதப்படுத்தக் கூடாது எனவும் தனித்தனி மனுவாக அளித்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future